மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், பிரியங்கா அருள் மோகன் நடிக்கும் 'மஞ்சணத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பை இசைஞானி இளையராஜா கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, நவ்வி ஸ்டூடியோஸ் மற்றும் பார்ச்சூன் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.
முன்னதாக 'பண்டாரத்தி புராணம்' என பெயரிடப்பட்டிருந்த இப்படம், பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று 'மஞ்சணத்தி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.