
இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பத்துக்கான என்விஎஸ் 03 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி 18 ராக்கெட் மூலம் நாளை இரவு 11 மணி 51 நிமிடத்தில் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.
ககன்யான் திட்டத்தின் கீழ் இதுவரை 8 ஆயிரம் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்காக 3 ஆளில்லா சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இந்தச் சோதனைகளின் ஒரு பகுதியான ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.