நாட்டில் இதுவரை 95,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 21 ஆண்கள், 51 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்குவர் என்றும், தற்போது 50 பகுதிகள் அதிக அபாயமிக்க பகுதிகளாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் வடகீழ் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாக உள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுளம்பு பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர் பிரசீலா ஷிரோமி எச்சரித்துள்ளார்.