
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி தளபதி 71 வயதான மொஹ்சென் ரெசாயி நியமிக்கப்பட்டுள்ளார்.
1994-ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் ரெசாயி மீது இன்டர்போல் ரெட் நோட்டீஸ் நிலுவையில் உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு அணுகுண்டுகளை விட முக்கியமானது என ஜூலை மாதம் ரெசாயி பகிரங்கமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.