
எஸ்ஐஆர் பணியின் போது முரண்பாடுகள் இருப்பதாக நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள் தேர்தல் பதிவு அதிகாரியின் முன் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூத் நிலை அலுவலரே வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களைச் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார் என்றும், அவசியமெனில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு அக்டோபர் 30ம் தேதி வரையிலும், மஹாராஷ்டிராவில் அக்டோபர் 12ம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.