/nakkheeran/media/media_files/2026/11/03/nf-2026-11-03-19-12-28.jpg)
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் 'ஜெயிலர் 2' படத்தை புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி திரையரங்கில் பார்வையிட்டார்.
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்த முதல்வர், எந்தவித சிறப்பு சொகுசு ஏற்பாடுகளும் இன்றி சாதாரணமாக மக்களுடன் மக்களாக அமர்ந்து படம் பார்த்தார்.
முதல்வரின் இந்த எளிய செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதுடன், பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.