
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக சர்ப்ரைஸாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதிமுக தனது சிட்டிங் தொகுதிகளை இழந்ததோடு, வாக்குவங்கியில் சரிவைச் சந்தித்துள்ளதால் அக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தாராபுரத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினரின் வாக்குகள் தவெகவுக்கு ஆதரவாக மாறியிருப்பது தேர்தல் முடிவுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.