
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' திரைப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் இணையும் புதிய நடிகை குறித்த அடுத்த அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.