
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடைவெளி கிடைத்துள்ள நிலையில், இந்திய வீரர் இஷான் கிஷன் தனது அரசுப் பணியைத் தொடர அலுவலகம் திரும்பியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக அவர் தனது அன்றாடப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகள் இல்லாத ஓய்வு நேரத்தில் தனது வங்கிப் பொறுப்புகளைச் சுறுசுறுப்பாக நிறைவேற்றும் இஷான் கிஷனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.