மர்ம நபர்கள் தனது முகத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாச வீடியோவில் மார்பிங் செய்து பரப்பிய விவகாரத்திற்கு நடிகை சுனைனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த அருவருப்பான செயலால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் முகத்தை வைத்து இதுபோன்று செய்யும் செயல்களை உடனடியாக நீக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.