
திமுகவின் சமீபத்திய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சியின் மாவட்டங்களின் எண்ணிக்கையை 110-ஆக உயர்த்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
புதிய நிர்வாகிகளை நியமிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமிக்கும் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
உட்கட்சித் தேர்தலில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்ததால், பொறுப்பாளர்கள் அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் தள்ளி வைத்துள்ளார்.