
தமிழகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 16-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தலில் அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 11 மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.