
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், உள் மாவட்டங்களில் வரும் 12-ம் தேதி வரை வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை மற்றும் 7.6 கி.மீ. உயரத்தில் உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு நிகழவுள்ளது.