
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், புதிய சிஇஓ Ashiss Kumar Das தலைமையில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மொத்த பணியாளர்களில் 25% முதல் 33% வரையிலான ஊழியர்களை செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் போன்ற சிறப்புத் திறன் கொண்ட Specialist பணிகளுக்கு மாற்றவுள்ளனர்.
மேலும், ஏஐ துறையில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 6,000 'Frontier Engineers' சிறப்பு நிபுணர்களை புதிதாக பணியமர்த்தவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.