
தனது முந்தைய உறவில் எப்போதும் பயத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய சூழல் இருந்ததாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்துள்ளார்.
துணையின் அருகில் இருக்கும்போது நிம்மதி கிடைக்க வேண்டும், ஆனால் அந்த உறவில் ஒருநாள் அன்பாகவும் மறுநாள் துன்புறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபமா நேரடியாக துருவ் விக்ரம் பெயரை குறிப்பிடாத நிலையில், சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.