/nakkheeran/media/media_files/2026/09/17/periyarmks-2026-09-17-12-54-00.jpg)
சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருக்கும் படத்திற்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலாயத்தில் உள்ள பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் என்று மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்க, அதனைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றனர்.