
தொழிலதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளம் மூலம் ஐரோப்பிய தலைவர்களை இணைய வழியில் அச்சுறுத்தி வருவதாக பிரான்ஸ் அரசு பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
பிரான்சில் வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நிய சக்திகள் தலையிட்டு குழப்பம் விளைவிக்க சதி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மை விவகாரத்தில் எங்குள்ள சக்திகளாக இருந்தாலும் தலையிடுவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பரோட் எச்சரித்துள்ளார்.