
கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விஜய் (31) என்பவரை, சிறுமியின் பாட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதலுக்குள்ளான விஜய் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், சிறுமியின் பாட்டியிடமிருந்து அரிவாளைப் பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.