
மின்வாரிய அலுமினிய கண்டக்டர் கொள்முதலில் 1,028 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர், பெருங்குடி, தேனாம்பேட்டை மற்றும் சேலம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளராகக் கூறப்படும் காசி என்பவரின் வீடு மற்றும் திருப்பூர் தனியார் நிறுவனம் ஒன்றில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.