
அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில் உள்ள கிலாட்ஸ்டோன் வனப்பகுதியில், 22 அடி உயர மின்கம்பத்தில் ஏறிய கரடி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
கடந்த 20-ம் தேதி மின்கம்பத்தின் உச்சிக்குச் சென்ற கரடியின் உடல் பாகங்கள் ஒயரில் பட்டதால் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மீட்புக்குழுவினர் கரடியை உயிருடன் மீட்க முயன்ற நிலையில், மின்கம்பத்தின் உச்சியில் இருந்து அதன் உடல் மீட்கப்பட்டு இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.