ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் சீனாவின் ஸியி பாவோவை 5-0 என வீழ்த்தி தங்கம் வென்றார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் குத்துச்சண்டையில் இந்தியா தங்கம் வெல்வதுடன், மேரி கோமிற்குப் பிறகு தங்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனை லவ்லினாவின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.