
நடப்பு ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து மொத்தம் 2.37 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.
இந்த விற்பனைத் தொகையானது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனையான 1.66 லட்சம் கோடி ரூபாயை விட அதிகமாகும் மேலும் கடன் சந்தையில் இருந்தும் ரூ.2,305 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஈரான்-அமெரிக்க மோதல் பதற்றங்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க பத்திர வருவாய் உயர்வு ஆகியவை முதலீடுகள் வெளியேற முக்கியக் காரணங்களாகும்.