
ஐநா பாதுகாப்பு சபையின் தற்போதைய கட்டமைப்பு 1945-ம் ஆண்டின் புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அதில் விரிவான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ், பாதுகாப்பு சபையில் புதியதாக உருவாக்கப்படும் அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
தற்போதைய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக இந்த சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.