
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறாத நிலையில், அவர் அணியின் நீண்ட கால திட்டங்களில் இல்லை எனத் தெரிகிறது.
ரஞ்சி கோப்பையில் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது உடற்தகுதியை நிரூபித்த போதிலும், தேர்வுக்குழுவினர் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளித்து ஷமியை மீண்டும் புறக்கணித்துள்ளனர்.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் கொண்டு, இளம் வீரர்களைத் தயார்படுத்தும் நோக்கில் இந்திய அணி நிர்வாகம் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.