
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மனநல மருத்துவத் துறையில் பேராசிரியராக உள்ள கான்சுவேலோ, தனது தாய் மற்றும் சகோதரி மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டார்.
தமக்கு ஏன் அந்த பாதிப்பு வரவில்லை என்பதை அறிய விரும்பிய அவர், மனச்சிதைவு நோயை ஏற்படுத்துவதற்கான காரணிகளை 20 ஆண்டுகள் ஆராய்ந்துள்ளார்.
இந்த நோய்க்குத் தீர்வு இல்லாவிட்டாலும் தனது ஆராய்ச்சி எதிர்காலச் சிகிச்சைகளை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.