உடலில் உள்ள கொழுப்பு செல்கள் தாங்கள் முன்பு குண்டாக இருந்த நினைவைச் சேமித்து வைப்பதாக சமீபத்திய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
எடையைக் குறைத்த பிறகு மீண்டும் கொழுப்பு உணவுகளை உட்கொள்ளும்போது, அந்த செல்கள் ஆற்றலை விரைவாகக் கொழுப்பாகச் சேமிக்கத் தொடங்குவதால் எடை வேகமாக அதிகரிக்கிறது.
எடையைக் குறைத்த பிறகு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதே மீண்டும் எடை ஏறாமல் தடுக்க ஒரே வழி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.