
யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2007-ம் ஆண்டின் பணப்பரிவர்த்தனை மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் கீழ், சாதாரண பயனர்களுக்கு இந்த இலவச சேவை தொடர்ந்து வழங்கப்படும்.
எதிர்காலத்தில் வணிகர்களுக்கான குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மிகக் குறைந்த அளவிலான கட்டணம் விதிக்கப்படலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.