
சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி விருப்பம் தெரிவித்த நிலையில், நிர்வாகம் 5.5% மட்டுமே தர முன்வந்ததால் இரு தரப்பிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் தோனி 25% பங்குகளைக் கேட்ட நிலையில், நிர்வாகம் 3% மட்டுமே தர முன்வந்தது; இறுதிக்கட்டப் பேச்சில் தோனி 18% கேட்டபோதும், நிர்வாகம் 5.5% மட்டுமே தர முடியும் என திட்டவட்டமாக கூறியது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், 18 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதும், 2026 ஐபிஎல் தொடர் முழுவதையும் தோனி விளையாடாததும் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.