மைரிபப்ளிக் மொபைல் சந்தாதாரர்களை ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றும் புதிய ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) கூட்டறிக்கையாக வெளியிட்டன.
2022-ல் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, தற்போது எம்1 கட்டமைப்பில் உள்ள மைரிபப்ளிக்கின் நான்காம் தலைமுறை வாடிக்கையாளர்கள் ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றப்படுகின்றனர்.
2025 ஆகஸ்ட் மாதம் மைரிபப்ளிக்கின் சிங்கப்பூர் விரிவலை வணிகத்தை ஸ்டார்ஹப் முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.