International
பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு

maalaimalar59m
THE BRIEF
1

டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 'டெல்லி பிரகடனம்' வெளியிடப்பட்ட நிலையில், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடுகள் தீர்வே ஒரே வழி என்று பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

2

1967ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, காசா முனை, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுதந்திரமான பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

3

லெபனானில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் கோரியுள்ளது.