யூகே பயோபேங்க் அமைப்பு 3,54,957 நபர்களிடம் 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில், தினமும் பிளாக் காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் சுருக்க நோய் அபாயம் 32 சதவீதம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு 47 சதவீதமும், கல்லீரல் நோய்களால் ஏற்படும் மரணங்கள் 42 சதவீதமும் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காபியில் உள்ள பாலிஃபெனால்கள் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் கல்லீரல் செல்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.