போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் கடைசி சீசனாக 2026-27 ஆம் ஆண்டு இருக்கும் என அறிவித்துள்ளார்.
தற்போது 41 வயதாகும் ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணியுடன் கொண்டுள்ள ஒப்பந்தம் 2027 ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.
சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் இதுவரை 976 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, ஓய்வு பெறுவதற்கு முன்பாக 1,000 கோல்கள் என்ற இலக்கை எட்ட தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.