
நைஜீரியாவில் விமானப்படைக்குச் சொந்தமான ATR-42 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 25 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 32 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெனின் நகரத்தில் இருந்து லாகோஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்த அந்த விமானம், ஒண்டோ மாகாணத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபட்டில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் போலா அகமது தினுபு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், நாட்டில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.