
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதளம் மீது சைபர் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளைத் திருடி டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரகால கட்டுப்பாட்டுக் குழு வழங்கிய தகவலின்படி, கசிந்த சுமார் 3,75,000 தரவுகளில் முதல்கட்ட ஆய்வில் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த சைபர் தாக்குதலால் வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதி செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படாது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.