
பெல்ஜியத்தில் நடைபெற்ற 58-வது பிளாண்டர்ஸ் கிராண்ட் ப்ரீ ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமார் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆண்களுக்கான 1000 மீ. ஸ்பிரின்ட் பிரிவில் 1 நிமிடம் 24.275 வினாடிகளிலும், 500 மீ. பிரிவில் 42.948 வினாடிகளிலும் கடந்து ஆனந்த்குமார் இரண்டு தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றினார்.
மேலும் 30,000 மீ. ரோடு பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. பிரிவுகளில் தலா ஒரு வெண்கலப் பதக்கமும் என மொத்தம் 5 பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.