
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒருமுறை கூடுவதால் தாங்கள் தலையிட முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு கேள்வி எழுப்பியது.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 55 டி.எம்.சி. நீரில் 21 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளதாகவும், கர்நாடக அணைகளில் 73 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாகவும் தமிழக அரசு வாதிட்டது.
வழக்கை செப்டம்பர் 15-க்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பு குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.