
இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை தொடங்க விரும்பும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தரைவழி தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு விதிகளுக்கு உடன்பட்டு பேஸ் ஸ்டேஷன்களை அமைக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே அனுமதி தரப்படும் என்று உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.