
கேரள மாநிலம் வயநாட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான அத்தப்பூக்கோலம் அமைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பல டன் எடையுள்ள விதவிதமான பூக்களைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டு உழைப்பால் இந்த பூக்கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த பூக்கோலத்தைக் காண வயநாடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.