
மும்பை ஐஐடியில் எனர்ஜி சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் துறையில் படித்து வந்த சாஹில் வகோடே என்ற மாணவர், தேர்வின்போது செல்போனை பயன்படுத்தியதாகவும் ChatGPT-ஐ பயன்படுத்த முயன்றதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிந்து விடுதி அறைக்குத் திரும்பிய மாணவர் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோரின் புகாரின் பேரில், ஐஐடியின் முன்னாள் மாணவர் நலன் துறை டீன் சூர்யநாராயண் துல்லா உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.