
சியோல் நகரில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்று 2-ல் இந்தியா - கொரியா அணிகள் மோதின.
ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ் 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் சூன்வூ குவானிடம் போராடி தோல்வி அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல் 6-2, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் ஹியோன் சுங்கிடம் வீழ்ந்ததை அடுத்து இந்திய அணி 0-2 என பின்தங்கியுள்ளது.