
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திட்டமிட்டுள்ளார்.
சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர், சவூதி அரேபியாவிற்கு தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.
செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.