
சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களால் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ.2.40 லட்சமாக உயர்ந்துள்ளது.