
ரூ.1.98 லட்சம் மதிப்புள்ள கிராபிக்ஸ் கார்டுக்குப் பதில் டிடர்ஜென்ட் பவுடர் அனுப்பிய இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு, ரூ.30,000 இழப்பீடு வழங்க மேற்கு வங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தொடரப்பட்ட பிறகு வாடிக்கையாளருக்கு முழுத் தொகையும் திரும்ப வழங்கப்பட்ட நிலையில், மன உளைச்சலுக்காக இந்த கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ஆணையம் கூறியுள்ளது.
நுகர்வோர் இத்தகைய மோசடிகள் குறித்து புகார் அளிக்க தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண்ணான 1915-ஐத் தொடர்பு கொள்ளலாம்.