
இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதல் தர போட்டி வரலாற்றில் குல்தீப் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
இவர் இதுவரை 53 முதல் தர போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.