
அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் பிரசவ சுற்றுலாவைத் தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
வணிக ஏற்பாட்டு முறையில் குழந்தை பெற்றெடுக்க வருவோருக்கு நுழைவு மறுக்கப்படும் என்றும், பயங்கரவாத அமைப்பினர் மற்றும் வெளிநாட்டு அரசு ஊழியர்களின் குழந்தைகள் குடியுரிமை பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1868-ல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தை சிலர் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதாகக் கூறி டிரம்ப் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.