
நேபாளத்தில் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பு வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட தமிழர்களில், 49 பேரின் நிலை குறித்து தகவல் இல்லாததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், காணாமல் போனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.
கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட இந்த பேரழிவில் இதுவரை 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.