
பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் பேரணியின் போது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 14 பேர் பலியானதோடு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தஹ்ரீக்-ஏ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.