
கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில், 79.61 மீட்டர் தூரம் எறிந்த நீரஜ் சோப்ரா 5-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா 82.84 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்த நிலையில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 78.63 மீட்டர் தூரத்துடன் 7-வது இடத்தைப் பிடித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.41 மீட்டர் தூரம் தாண்டி டிரிபிள் ஜம்ப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நாளை பதக்கத்திற்கான போட்டிகள் நடைபெற உள்ளன.