
செப்டம்பர் 2, 2026 அன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்ததால், முதலீட்டாளர்கள் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 373 புள்ளிகள் சரிந்து 76,570 புள்ளிகளிலும், நிப்டி 141 புள்ளிகள் சரிந்து 23,914 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பேங்க் நிப்டி 237 புள்ளிகள் சரிந்து 57,172 புள்ளிகளிலும், மிட்கேப் நிப்டி 149 புள்ளிகள் சரிந்து 14,663 புள்ளிகளிலும் வர்த்தகம் முடிவடைந்தது.