
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் 15 நாள் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த ஆட்சியில் தூய்மைப் பணியாளர்களுடன் ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பணியாளர்களின் கோரிக்கைகள் நிதி சார்ந்தவை என்றும், கடந்த ஆட்சியில் ரிப்பன் மாளிகைக்குள் அனுமதிக்கப்படாத பணியாளர்கள் தற்போது உள்ளே அமர்ந்து போராட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.